திருட்டுப் பொருட்களுடன் அராலிப் பகுதியில் இருவர் கைது
யாழ். அராலிப் பகுதியில் திருடப்பட்ட பொருட்களை சைக்கிள்களில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (02) கைதுசெய்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.  அத்துடன் இவர்களிடமிருந்து 04 மின் மோட்டார்கள், பித்தளை குத்துவிளக்குகள், குடங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத்; தொடர்ந்து அராலி தெற்கைச் சேர்ந்த 35 வயதான  ஒருவரையும்   தெல்லிப்பழையைச்  சேர்ந்த ...