வடமராட்சி பொலிகண்டி, பாலாவிப் பகுதியில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான முன்னாள் பெண் போராளி ஒருவர் வெள்ளிக்கிழமை தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளவராவார். புலிகளின் மூத்த பெண் போராளியாக இருந்த இவர் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்குள்ளாகி இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டு வரை புலிகள் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17 இன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியிலுள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன்  இவர் வாழ்ந்து வந்தார். வெள்ளிக்கிழமை வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீமூட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விடயமறிந்து சம்பவம் இடத்திற்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Comments