யாழ்ப்பாணம் புங்குடுதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் சடலம் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலாயுதம் சிவபாலன் (வயது63) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேரில் சென்ற ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கே.மகேந்திரராஜா சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments