வவுனியாவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கடுகதி ரயில் மீது மோதி யுவதியொருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டாரபுளியங்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் 19 வயதுடைய தில்ஹானி மஹேசிகா எனப்படும் பண்டாரபுளியங்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட யுவதியே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று ரயில் வீதியில் நின்று கொண்டிருந்த பசுக்கன்று ஒன்றினை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments