பாங்கொக் :  தாய்லாந்து  ரெயாற் மாகாணத்தில் அமைந்துள்ள பெற்றோலிய உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்  100 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை  ரெயாறி மாகாணத்தில் அமைந்துள்ள “பெப்டா புட்” ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த ஆலையில் வெடி விபத்தினை உண்டுபண்ணியுள்ளது. இவ்வெடி விபத்தால் குறித்த ஆலையை அண்டிய நூற்றுக்கும் அதிகமான பிரதேச வாசிகளுக்கு இரசாயணங்களினால் பாதிப்புக்கள் ஏற்படலாம் என நம்பப் படுகிறது. குறித்த வெடிவிபத்தையடுத்து அப்பகுதியில் கரும்புகை இடம்பெற்று சில நிமிடங்களில் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படைப்பிரிவினர் 4 மணி நேர போராட்டத்தின் பின்பு தீயினை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவந்துள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவமானது கடந்த சனிக்கிழமை ஏற்பட்டுள்ளதுடன் செயற்கை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ள தாங்கியொன்றை  தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோதே குறித்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிகளவான தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
குறித்த வெடி விபத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரெயாங் மாகாண கவர்ணர் செனி ஜிட்டாகஸம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பெப்டா புட் பகுதி பொலிஸ் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சரோகன் விட்டில் கோர்ன்குல் கருத்து தெரிவிக்கும் போது விபத்துக்கான காரணத்தை கண்டு பிடிப்பதாக தடயவியல் நிபணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார், அந்நாட்டு பிரதமர் குறித்த வெடிவிபத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் குறித்த வெடிவிபத்துக்காவ காரணத்தை கண்டறிய நிபுணர் குழு வொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments