திருமதி கந்தையா சின்னாச்சி

தோற்றம் : 20 நவம்பர் 1930 — மறைவு : 7 மே 2012

தெல்லிப்பளை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை தையிட்டியை வசிப்பிடமாகவும் தற்போது ஆனைக்கோட்டை கூழாலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னாச்சி அவர்கள் 07-05-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வயித்தி, வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

இரத்தினேஸ்வரி, இராஜேஸ்வரி, குகனேஸ்வரி, சர்வேஸ்வரி, கணேசலிங்கம்(தபால் ஊழியர் காங்கேசன்துறை), கையிலைநாதன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் “T.O” சுகாதாரத் திணைக்களம் – யாழ்ப்பாணம்), பாலேந்திரன், தனேந்திரன்(சவுதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமு, தெய்வானை, மற்றும் அம்பலம், தங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2012 புதன்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் தேவாலய ஒழுங்கை, கூழாலடி, ஆனைக்கோட்டை என்னும் முகவரியில் நடைபெற்று, ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணேசலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774727639
தனேந்திரன் — சவுதி அரேபியா
செல்லிடப்பேசி: +966532334501

Comments