ரஷ்ய நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய மலைப் பகுதியில் மோ‌தி ‌விப‌த்து‌க்கு‌ள்ளான‌தி‌ல் அ‌‌தி‌ல் பயணித்த 50 பே‌ரும் உ‌யி‌ரிழ‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன அஞ்சப்படுகின்றது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பரீட்சார்த்த ஓட்டமாக ரஸ்யாவை நோக்கி நேற்று இவ்விமானம் புறப்பட்டது.விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் தொடர்ந்தன.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாப் பகுதியில் உள்ள சலாக் மலைப்பகுதியில் குறித்த விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேஷிய இராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விமானம் சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த வேளையில் அதனை 6000 அடி வரை கீழிறக்குவதற்கு விமானி அனுமதி கோரியுள்ளதாகவும் இதன் பின்னரே கட்டுப்பாட்டறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலைப்பகுதியில் ஏன் இத்தகைய அனுமதியை விமானி கோரினார் என்பதும், ஜகார்த்தாவிலுள்ள விமான நிலைய கோபுரம் இதற்கான அனுமதியை எவ்வாறு வழங்கியதெனவும் அதிகாரிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள், ரஷ்ய நாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுமே விமானத்தில் பயணம் செய்தனர்.
குறித்த விமானம் ரஷ்யாவின் சுக‌ோய் விமான நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
சுக‌ோய் விமான நிறுவனம் இதுவரை போர் விமானங்ளை மட்டு‌மே தயாரித்து வந்த நிலையில் தற்போது பயணிகளின் விமானத்தை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments