சிலாபம் – குருநாகல் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடனும் மரத்துடனும் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதால் சிலாபம் வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனையோர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Comments