அம்மா
அம்மா உனை நினைக்கையிலே
ஆனந்தம் தான் பெருகையிலே
இன்று எண்ணும் போதினிலே
ஈன்றவள் நினைவு நெஞ்சினிலே
உலகை எனக்கு காட்டையிலே
ஊட்டி உணவும் கொடுக்கையிலே
ஐயா இவர் எனச் சொல்கையிலே
ஒருமுறை கண்கள் பார்க்கையிலே
ஓடி முத்தம் கொடுக்கையிலே
ஒளவழி அவரும் அணைக்கையிலே
அஃதே ஆனந்தத்தில் நான் மிதக்கையிலே!

Comments