கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வந்த இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அலவத்துகொடை துனுவில கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் துனுவில கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே. பிரேமதாச (வயது 48) என்ற நபரே கல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அயல் வீடுகளில் வசித்து வரும் மேற்படி இருவரும் கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும் இவர்களிடையே கோழி வளர்ப்புத் தொழிலில் பெரும் போட்டித் தன்மை எழுந்ததுடன் அது பின்னணியில் குரோதமாக மாறியதாகவும் கூறப்படுகின்றது.
கோழிகள் காணாமல் போதல் தொடர்பில் இருவருக்குமிடையில் அடிக்கடி வாய்ச்சண்டடைகள் இருந்துள்ளன. சம்பவ தினத்தன்று பிரேமதாஸ என்ற நபர் பாதையில் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர் அவரை எதிர்பாராத விதத்தில் கல்லால் தாக்கியுள்ளார். இதில் தாக்கப்பட்டவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments