ஊழியர் சேமலாப நிதியை கடந்த ஒன்றரை வருடங்களாக செலுத்தவில்லையென்று தெரிவித்து, டெனிஸ் மிதி வெடியகற்றும் நிறுவனப்பணியாளர்கள் டெனிஸ் மிதி வெடியகற்றும் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2010ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவரையில் தமக்கான சேமலாப நிதியை தமது நிறுவனம் செலுத்தவில்லையென இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.சுமார் 270 இற்கும் அதிகமான மிதிவெடியகற்றும் பணியாளர்களே இவ்வாறு இன்று காலை சுண்டுக்குளியிலுள்ள அவர்களது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இவ்வாறு இவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டதோடு இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன.அத்தோடு அலுவலகத்தின் கண்ணாடியையும் ஊழியர்கள் அடித்து நெருக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தற்போதும் இவர்கள் அலுவலக வளாகத்திலேயே தரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments