கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்து அதனை விழுங்கி தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக் காவலர்களின் கண்காணிப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நபரை ஸ்கேன் பரிசோதனைக்குட்படுத்தியபோது வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பதை வைத்தியர்கள் ஊர்ஜிதப்படுத்தியதையடுத்தே அச்சங்கிலியை எடுப்பதற்காக அவரை வைத்தியசாலையில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் பாதுக்கையிலிருந்து வந்த தாயும் மகளும் கோட்டை புகையிரத நிலையத்தில் இறங்கியபோது மகளின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை சந்தேக நபர் பறித்து கொண்டு தப்பியோடவே, தாயும் அங்கிருந்தவர்களும் சத்தமிட்டுள்ளனர். அதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் சந்தேக நபரைத் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்த கொழும்பு கோட்டை பொலிஸார் அவரை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது ஸ்கேன் பரிசோதனையின் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இக்குற்றச் செயலைப் புரிந்துள்ளார். இச்சந்தேக நபர் இதற்கு முன்னரும் இது போன்ற பல குற்றச் செயல்களைப் புரிந்துள்ளதாகக் கூறும் கொழும்பு கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

Comments