இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எற்பாட்டில் அகில இலங்கை தேசிய இளைஞர் மன்றங்களின் மாவட்ட அணிகளுக்கு இடையே நடை பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியின்  இறுதி யாட்டத்தில் யாழ். மாவட்ட அணிகளுத்துறை அணியைத் தோற்கடித்து முதலிடத்தைத் தட்டிக் கொண்டது.
நேற்றுப் பிற்பகல் மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் களுத்துறை அணியும் யாழ்.மாவட்ட அணியும் மோதிக் கொண்டன.
ஆரம்பம் முதலே இறுதிவரை இரு அணிகளும் அனல்பறக்கும் ஆட்டத்தில் இறங்கின.
மகரகம மைதானத்தில் களுத்துறை அணிக்கே பார்வையாளர்களின் ஆதரவு இருந்தது.
இதனால் அந்த அணி இன்னும் உத்வேகத்தோடு யாழ். அணியை எதிர்கொண்டது. எனினும் யாழ். அணி முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடி களுத்துறைக்கு பலத்த சவாலைக் கொடுத்தது.
இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றவண்ணம் இருந்ததால் இறுதிவரை வெல்லப்போகும் அணி எதுவென்று கணிக்க முடியாது இருந் தது. எனினும் இறுதியில் களுத்துறை அணியை 42:37 என்ற புள்ளி அடிப் படையில் வீழ்த்தி முதலிடத்தைக் கைப்பற்றி யாழ்.மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அணி சாதனை படைத்தது.

Comments