அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர், இயந்திரம் சுற்ற ஆரம்பித்ததும் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் குழந்தையுடன் பொது சலவை இயந்திர நிலையத்தில், துணிகளை சலவைக்கு கொடுக்க சென்றனர்.துணி சலவை முடியும் வரை குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த இந்த தம்பதிக்கு திடீரென விபரீத புத்தி ஏற்பட்டது.அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை உட்கார வைத்து வேடிக்கை காட்ட நினைத்தனர்.சலவை இயந்திரத்தின் கதவை திறந்து குழந்தையை உட்கார வைத்ததும் தானியங்கி கதவு மூடிக்கொண்டு, இயந்திரம் சுழல ஆரம்பித்து விட்டது.விபரீதத்தை உணர்ந்த தம்பதியர் கதற ஆரம்பித்து விட்டனர். உடனடியாக சலவை இயந்திர நிலையத்தினர், மின் இணைப்பை துண்டித்து குழந்தையை சலவை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுத்தனர்.நல்ல வேளையாக, குழந்தை உயிரோடு இருந்தது. லேசான காயங்கள் மட்டும் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தன. இந்த சம்பவத்துக்கு, தம்பதியர் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

Comments