தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி  இளைஞர்களைக் கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாகச் செலுத்திச் சென்றுள்ளனர்.
பொலிஸார் தமது மோட்டார்சைக்கிளில் இவ் இளைஞர்களைப் பிடிப்பதற்காகச் துரத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தை நிறுத்திவிட்டு வேகமாகச் சென்றுள்ளனர்.
இவ்வேளை முன்புறமாகச் சென்றுகொண்டிருந்த  லான்மாஸ்டருடன் இவர்களின் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் கெருடாவில் வடக்கைச் சேர்ந்த கந்தராசா ஜதீஸ்வரன் (வயது 34 ) வரணியைச்சேர்ந்த இரத்தினசிங்கம் சுதாகரன் (வயது 25 ) என்ற இருவருமே விபத்துக்குள்ளாகினர்.

Comments