யாழ். வடமராட்சி,நெல்லியடி நகரப்பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக  3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இக் கடைகள் எரிந்து நாசமாகின.

இதன் போது தளபாடக் கடை மற்றும் நகைக்கடை முழுமையாக எரிந்ததுடன், காப்புறுதி நிறுவனம் ஒன்று பகுதியாக சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து நெல்லியடி வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொண்டனர்

Comments