தன்னை தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் தினமும் பிரச்சனைகளை ஏற்படுத்தி தனது மனைவியைப் பிரித்து எடுத்ததினால் மனமுடைந்த மருமகன் தனக்குத் தானே மண்எண்ணை ஊற்றித் தீ மூட்டி மரணமடைந்துள்ளார்.

மேற்படி சம்பவமானது,

யாழ்.மல்லாகம் நீதிவான் நலன்புரி வீதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2012) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான தர்மபாலன் தர்மராஜ் என்பவர் தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயன்றி நேற்று (23) புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் தான் டோகா கட்டாரில் குடும்ப வறுமைகாரணமாக வெளிநாடு சென்று விட்டு மூன்று மாதங்கள் யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் வந்துள்ளேன்.எனது மனைவியான 29 வயதுடைய த. கங்காஜினி என்னை தனக்கு வேண்டாம் எனக் கூறி தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்துள்ளார். நான் அவளோடு வாழ வேண்டும் என அவளின் தாயாரிடம் பல முறை கேட்டும் என்னை அவளோடு சேந்து வாழ விடவில்லை எனது மாமியார்.எனது மனைவி நான் டோகாவில் இருக்கும் போது வேறு நபருடன் கள்ளக் காதல் கொண்டு வயிற்றில் பிள்ளையையும் வாங்கியிருக்கின்றார். இந்தப் பிள்ளையை அழித்து விட்டு வரும்படி பல முறை கோரியும் அவள் கேள்கவில்லை இதனால் நான் அவளுக்கு அடித்தேன் அதனால் அழுது கொண்டு போய் தாய் வீட்டில் இருந்து விட்டார்.நான் அவளிடம் மிகவும் பாசம் வைத்திருக்கின்றேன் ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்துள்ளாள் இதனைத் தாங்க முடியாது என்னையே அழிப்பதற்கு முடிவெடுத்து மண்எண்ணையை என் உடம்பில் ஊற்றி தீவைத்தேன் என பொலிஸாருக்கு உயிருடன் இருக்கும் போது கொடுத்த வாய் மூல வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Comments