கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகரின் சில பகுதிகளிலும் நுவரெலியா, ஹட்டன், தியத்தலாவ, இரத்தினபுரி, பதியதலாவ பகுதிகளில் நேற்றிரவு 9.52 மணியளவில் சிறியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வு இலங்கைக்குள் மட்டுமே உணரப்பட்டதொன்றாயிருந்ததாக ஆரம்பத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியின் காரணமாக இது ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேநேரம், கடந்த 20 ஆம் திகதி மலையகத்தின் பல பகுதிகளில் இது போன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 11 ஆம் திகதி மாலையும் கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பெரும் பாலான பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments