வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை.அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய கெப்லர் 22-பி கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்றும் கருதப்படுகிறது.

Comments