2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான சுடரை நேரில் பார்க்கும் வாய்ப்பு  இலங்கையின் இரண்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதற்கமைய இந்த இரண்டு மாணவர்களும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் சுடர் டரம் மாநிலத்திற்கு கொண்டுவரப்படும் நாளில் இதனைக் கொண்டாடும் வகையில் அங்கு சர்வதேச இளையோர் விளையாட்டு விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 11 நாடு களைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட 480 வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்த  விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை கண்டி சில்வெஸ்டர் கல்லூரியின் இசுறு டில்ஷான் மற்றும் ö மாஹமட் அசார்டீன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான சுடரை சில நிமிடங்கள் கரங்களில் ஏந்தும் வாய்ப்பும் இந்த இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இசுறு டில்ஷான் மொஹமட் அசார்டீன் ஆகியோர் உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை லண்டன் ஒலிம்பிக் விழாவுக்கான சுடர் ஸ்கொட்லாந்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

Comments