சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி இரண்டாவது (82)பிறந்த தினம் இன்றாகும்.தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை ,இவரது சகோதரிகள் ,மச்சான்மார், பிள்ளைகள் ,மருமக்கள் ,
பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள் ,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர். இன்னும் பல உறவுகளுக்கு சொந்தக்காரியான இந்த அம்மாவை சிறுப்பிட்டி இணையமும் தனது எண்ணப்படியே இன்னும் பல ஆண்டுகள் முதுமையிலும் தனிமை இன்றி… வருத்தங்களின் வலியும் இன்றி வாழ வாழ்த்துகின்றோம் .
கருவாக்கி; எம்மை உருவாக்கியவளே
காலமெல்லாம் எமக்காய் உழைத்தவளே
வீரமாய் விவேகமாய் எம்மை நீ ஆளாக்கி
மழைக்கு குடையாய் மண்ணுக்கு நீராய்
விதைக்கு உயிராய் உரமிட்டு வளர்த உன்னை உரிமையாய் வாழ்துகிறோம்.
கருவறையில் எம்மை உருவாக்கி உலகறிய வைத்தாய்
காலமெல்லாம் உன் அன்பால் எமை உருகவைத்தாய்
தாயே நீ தந்த உயிரும் உடலும்
உன்அன்புக்காய் ஏங்கும்
உலகத்தில் உனை விட வேறேது உறவு
உனை வாழ்த வந்த நாள் இது வந்த மகிழ்வு
தருகிறதே புது மகிழ்வு தாயே
வாழ்க என்றென்றும் பல்லாண்டு
























