யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை அரசடிச் சந்தியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அவ்வீட்டின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. மின்னொழுக்கு காரணமாகவே இத்தீ விபத்து ஏற்பட்டதாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். ‌நேற்றையதினம் பூராகவும் மின்வெட்டு அமுலிலிருந்ததாகவும் பின்னர் மாலை 6 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டபோது வீட்டின் ஒருபகுதியில் தீ பரவியதாகவும் அவர் கூறினார்.  உறவினர்களின் உதவியுடன் தீயை அணைத்ததாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

Comments