ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகர மருத்துவமனையில் முதன்முறையாக குழந்தை பிறப்பினை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உதவியுடன் புகைபடமாக பதிவு செய்துள்ளனர். இது மருத்துவ வரலாற்றில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. பொதுவாக இந்த கருவிகள் குழாய் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சாரைட் மருத்துவ குழுவினர் இதற்காக திறந்த நிலைகொண்ட ஸ்கேனரை உருவாக்கினர். அது குழந்தை பிறப்பின்போது தாய்மார்களுக்கு எளிதான நடைமுறையை தந்தது. பெர்லின் நகரத்தின் சாரைட் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் எர்ன்ஸ்ட் பீண்டர் கூறும்போது, குழந்தை இயல்பான முறையில் பிறந்தது. அது கருப்பையில் இருந்த நிலை, அதன் இயக்கங்கள் மற்றும் இயல்பாக நடைபெற்ற பிரசவம் ஆகியவை கருவியின் உதவியால் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக குழந்தையின் இதய துடிப்பும் அந்த கருவியால் பதிவு செய்யப்பட்டது என்றார். மேலும் மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, பல தாய்மார்கள் இந்த முறையில் குழந்தை பெற்று கொள்ள முன்வந்துள்ளனர். மேலும் ஐந்து குழந்தை பிறப்புகள் எம்.ஆர்.ஐ. கருவியின் புகைபட பதிவுடன் நடைபெறும் என்று தெரிவித்தனர். தற்போது சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பானது அதிகரித்து வருகிறது. இந்த சாதனையின் மற்றொரு அம்சமாக, வருங்காலத்தில் சிசேரியன் குழந்தை பிறப்பில் உள்ள பல சிக்கல்கள் தவிர்க்கப்படும் என தெரிகிறது

Comments