இளவாலையில் தனித்திருந்த மூதாட்டியைத் தூக்கிச் சென்று கிணற்றுக்குள் போட்டுவிட்டு அவரது தங்கச்சங்கிலியை திருடிய சந்தேகத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை இளவாலைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிறரது உதவி எதுவுமின்றி 78 வயதுடைய இந்த மூதாட்டி வசித்து வந்துள்ளார். அங்கு சென்ற அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அந்த மூதாட்டியைத் தூக்கிச்சென்று கிணற்றினுள் போட்டுள்ளனர். அத்துடன் அவரது தங்கச்சங்கிலி ஒன்றை திருடியுள்ளனர்.  இதனையடுத்து அவர்களது நடத்தைகளில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் உள்ளே சென்று பார்த்த போது நிலைமையைப் புரிந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த இரண்டு பெண்களையும் அயலவர்கள் பிடித்து வைத்துக்கொண்டு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். சங்கிலியையும் மீட்டனர். இரண்டு பெண்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

Comments