வாஷிங்டன், ஆக. 22: இந்திய அரசின் பரிந்துரையின்கீழ், வதந்தியைப் பரப்பும் தகவல்களை நீக்க சமூக இணையதளமான ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. “வன்முறைகளை உருவாக்கும் வகையில் செய்திகளை தொடர்ந்து பரப்புவோரின் அக்கவுண்ட் முடக்கப்படும்’ என்றும் ஃபேஸ்புக் எச்சரித்துள்ளது. அசாமில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக இணையதளம் மற்றும் செல்போனில் வதந்திகள் பரவின. இதைத் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வரும் 250-க்கும் மேற்பட்ட இணையதளங்களை அரசு தடை செய்தது. மேலும், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களிடம் இதுபோன்ற வதந்திகளை தடை செய்ய வேண்டுமென்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது: சமூக அமைதியைக் கெடுக்கும் விதத்திலான செய்திகள், படங்கள், பேச்சுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டதெனில் அது நீக்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் ஊழியர்கள் வன்முறையைத் தூண்டக் கூடிய செய்திகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனவா என்று 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பரப்பும் விஷமமான செய்திகளை விழிப்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஃபேஸ்புக் பயன்படுத்துவோரை அந் நிறுவனம் கேட்டுக் கொண்டது. இதேபோல் கூகுள், டுவிட்டர் ஆகிய இணைய தளங்களும் தங்கள் இணையதளங்களில் பரப்பப்படும் வன்முறைகளை உண்டாக்கும் வதந்திகளைத் தடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளன.
இலங்கை ஆனைக்கோட்டைநேரம்
hindutempelchur
சுவெற்றா அம்மன் கோவில்
Lankasri.com
மழலைகள்கல்வி
Navarkiri.com
புங்குடுதீவு.கொம்
நம்மவர்படைப்புக்கள்
kudaththanai.com
worldkovil.com
Test
Manithan
சிறப்பு இணையங்கள்
Tamil MTV Live
குறும்படங்கள்
Super Singer
தமிழ்யுனிக்கோட்
-
Recent Posts
Recent Comments
- ஈழ இணையம் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இணையதளங்கள் உதவி on ஆனைக்கோட்டை இணைய நிர்வாகி தாயகத்தில்…..
- kamsa on இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்
- sela srithar on மரணஅறிவித்தல் தர்மசீலன் 21-05-2012
- ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் …… | தாவடி on ஆனைக்கோட்டை குழந்தைக்கவிஞன் தமிழ்நேசனின் உள்ளத்தின் ஆசைகள் ……
- ARULCHELVAN on தொடர்புகளுக்கு
Facebook
Archives
Meta
new add
coming soonSTS Studio
your ads
Categories
அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டுபாடசாலைகள்
கோவில்கள்
இதயபூமி
test
counter























