வாடகைத் தாயாகச் செயற்பட்டு தனது மகளின் குழந்தையைக் கருவில் சுமந்து பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மஸாசுஸெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த லிண்டா சிரொஸிஸ் (49 வயது) ௭ன்ற பெண்ணே தனது மகள் ஏஞ்சல் ஹெபேர்ட்டிற்காக (25 வயது) கருவைச் சுமந்து தனது பேரக் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு மட்டென் ஹெபேர்ட் ௭னப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இருதயப் பாதிப்புக்குள்ளாகியிருந்த ஏஞ்சல், குழந்தையொன்றைச் சுமந்து பெற்றெடுப்பது அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம் ௭ன மருத்துவர்கள் தெரிவித்திருந்ததால் ஏஞ்சலின் கருவையும் அவரது கணவர் பிறையனின் விந்தணுவையும் செயற்கை முறையில் கருக்கட்டி பெறப்பட்ட சிசுவை லிண்டா தனது கர்ப்பப் பையில் சுமக்க முன் வந்தார். ௭னினும், லிண்டாவின் வயது காரணமாக ஆரம்பத்தில் அவரது குழந்தையைச் சுமக்கும் திட்டத்துக்கு லெஸிங்டன் நகரிலுள்ள மீள் உற்பத்தி விஞ்ஞான நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ௭திர்ப்புத் தெரிவித்திருந்தனர். ௭னினும், இறுதியில் அவரது கோரிக்கைக்கு மருத்துவர்கள் இணங்கியதையடுத்து, அவர் தனது மகளின் கருவைச் சுமக்கும் முயற்சியில் முதல் தடவையிலேயே வெற்றி பெற்று குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

 

.

Comments