முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்பாள்கோயிலில் நடைபெறவிருந்த வருடாந்த மிருகபலி பூஜை ஜனாதிபதியின் தலையீட்டையடுத்து அடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவிருந்த பலி பூஜையினை நடத்தக் கூடாது என பல அரசியற் கட்சிகள் வலியுறுத்தி இருந்தனர். ஆனாலும் இப் பலி பூஜையினை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டால் மட்டுமே தாம் இதனை நிறுத்துவதாக ஆலய நிர்வாகம் முன்னர் அறிவித்திருந்தது.
அதனடிப்படி மிருக பலியை நிறுத்துமாறு வலியுறுத்திய கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தமது கோரிக்கையினை அனுப்பியிருந்தனர்.
அதன்படி குறித்த மிருகபலி பூஜையினை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் அதன்படி குறித்த பூஜையும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட புத்தரின் கபிலவஸ்த்து வடமேல் மாகாணத்திற்கு எதிர்வரும் முதலாம் திகதி மக்களது தரிசனத்திற்காக எடுத்துச் செல்லப்படவுள்ளது இதனால் புத்தரை மக்கள் தரிசிக்கும் பொழுது உயிர்களைக் கொல்லக் கூடாது அது பாவமான செயல் என்ற காரணத்தையே இப் பூஜையினை நிறுத்தியமைக்கு காரணமாக அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments