யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேற்கொண்டது. இவ்ஆய்வின் போது காணியொன்றின் கழிவு எண்ணை பாரிய அளவில் தேங்கி நின்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மின் உற்த்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எண்ணையினாலேயே இக்கசிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டள்ளது

மேலும் இது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை வலி.தெற்கு பிரதேச சபையின் கோரிக்கையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.

Comments