தனது மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டி கொழுத்தி எரித்த கணவனுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையை யாழ்.மேல் நீதிமன்றம் இன்று (30) வியாழக்கிழமை வழங்கியுள்ளது. யாழ். சுதுமலைகாவக்கடு என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு முத்துலிங்கம் ஜெகன்மோகன் என்பவர் தனது மனைவியான ஜெகன்மோகன் லக்ஷ்மி என்பவரை மண்ணெண்ணை ஊற்றி எரித்துள்ளார். இச் சந்தேகத்தின் பேரில் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இவர் மீது குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்டது. யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், முத்துலிங்கம் ஜெகன்மோகன் என்பவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10,000 ரூபா ஆபராதமும் அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments