சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி, ஆண்களின் கழிவறைகளைப் பயன்படுத்தும் போராட்டத்தில் அந்நாட்டுப் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் பொது கழிவறைகளில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் நாட்டில் பெண்களுக்கான கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி, ஆண்களின் கழிவறைகளை பெண்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதற்காக ஆண்கள் கழிவறைகளின் முன் போராட்ட பேனர்களை கட்டிவிட்டு, அவற்றை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போராட்ட பேனர்களில், பெண்களுக்கு அதிக வசதிகள் தேவை. அவளை நேசிப்பதாக இருந்தால், அவளை காக்க வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

கடந்த 19ஆம் திகதி முதல் இப்போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தற்போது குவான்ஷு நகரில் பெண்களுக்கு கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. குவான்ஷு நகரில் கல்லூரிகளில் உள்ள பெண்கள் கழிவறைகள் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments