கிளிநொச்சி கனகராயன்குளம் பிரதேசத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று மலசல குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

கனகராயன் குளம், பெரியகுளம் பிரதேசத்தில் ஏனைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அக்குழந்தை அங்கு புதிதாக அமைக்கவிருந்த மலசல குழிக்குள் வீழ்ந்துள்ளது.

குழந்தையைக் காணவில்லையென உறவினர்கள் தேடிச்சென்றபோது மலசலக் குழியில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக அனைத்துப் பகுதியும் வெள்ளநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments