சர்வாதிகாரி ஹிட்லர் பதவிக்கு வந்து 80 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

ஹிட்லர் பதவியேற்று 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு மூலமாக நினைவு கூரப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் கூறுகையில், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சகிப்பு தன்மையையும் பேண மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பெரும்பான்மையான ஜேர்மனியர்கள் நாஜிக்களை சகித்து கொண்ட காரணத்தினால் தான் ஹிட்லர் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜனநாயகத்தை அழிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து The Topography of Terror என்ற திறந்தவெளி கலையரங்கின் இயக்குநரான ஆண்ட்ரியாஸ் நச்சாமா பேசுகையில், ஆஸ்திரியாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்த ஓவியர் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக மாறுவார், உலக சரித்திரத்தை மாற்றுவார் என்பதை யாரும் அந்தக் காலத்தில் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

இந்தக் கண்காட்சி ஹிட்லர் காலத்தில் அன்றாடம் மக்களாட்சி அமைப்புகள் வலுவிழந்து போனதை வெளிப்படுத்துகின்றன.

இரண்டாம் உலகப்போரில் 40 முதல் 60 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஹிட்லரின் போக்கைப் புலப்படுத்துகின்றது.

ஹிட்லரால் மட்டுமே ஆறு மில்லியன் யூதர்கள் உயிரிழந்ததையும் இக்கண்காட்சியின் மூலமாக நாம் உணர்கிறோம் என்று தெரிவித்தார்.

Comments