இலங்கையில் சிறுவருக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன் அது சமுகத்தில் பாரிய தாக்கத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், பாடசாலைகள், விடுதிகள், கிராமங்கள், புகை வண்டிகள், என எல்லா இடங்களிலும் வயோதிபர், அதிபர், ஆசிரியர், பொலிஸ் அலுவலர்கள், சகோதரர், தந்தை என எல்லோரும் தமது பேத்தி, மகள், மாணவி, சகோதரி என சிறுமியர் எல்லோருக்கும் எதிராகவும் பாலியல் வல்லுறவுகளும், துஸ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.
கடந்த காலங்களில் பச்சிலம் பாலகியான 03 வயது சிறுமியர் தொடக்கம் 14 வயது சிறுமி தங்கல்லையில் சுமார் 25 நபர்களுக்கு மேல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை. நாவலப்பிட்டிய துஸ்பிரயோகம் (பின்பு) பொலிஸ் அதிகாரிகளினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை என சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றிய செய்திகள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இன்னும் பல சம்பவங்கள் வெளிவராமலும், மறைக்கப்பட்டும் உள்ளது.
சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கும் இடம் என நாம் நம்பும் வீடு, பாடசாலை, பொலிஸ் நிலையம் என எல்லா இடங்களிலும் துஸ்பிரயோகங்கள் மலிந்து கிடக்கின்றன. இதற்கு எதிராக அரசாங்கம் எந்தவிதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனை தடுக்கவும் மட்டுப்படுத்தவும் போதுமான பொறிமுறை இலங்கை அரசிடம் இல்லை எனலாம். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நன்நடத்தை பிரிவு பொலிஸ், சிறுவர் பற்றிய பொலிஸ் பிரிவு என்பன இவ்விடயத்தில் அறிக்கை விடுவதைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
இலங்கையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களுக்கு கடுமையான சட்டங்கள் காணப்பட்டாலும் நடைமுறையில் முறைப்பாடு, விசாரனை, முறைகளின் வினைத்திறன் இன்மை, ஊழல், அதிகாரம் என்பன சட்டத்தின் நோக்கத்தை அடைய தடையாய் அமைந்துள்ளன. கிருலப்பனை, தங்கல்லை, நாவலப்பிட்டி, அக்குரஸ்ஸ வடக்கு, கிழக்கு, என நாட்டின் எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடும் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் என்பன உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க தடையாக உள்ளது.
இலங்கையில் முக்கியமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு சட்டமாதிபரால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. நீதவான் நீதிமன்றில் சுறுக்க முறையற்ற விசாரனையில் பின்பே மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு முழு தகவலுடன், சான்றுகளுடன் ஆற்றுப்படுத்தப்படும், எனின் சான்றுகள் மறைக்கப்பட்டனவா? சாட்சிகள் இல்லையா? அல்லது சட்டமாதிபர் திணைக்களம் வேறு அழுத்தத்தினால் இவ்வழக்கை மீளப்பெற்றுக் கொண்டதா? எனும் கேள்வி எழும். எது எவ்வாறானாலும் இவை மக்களுக்கொதிராக இழைக்கப்படும் அநீதியாகும்

Comments