பத்தாம் வகுப்பு மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த 5 மாணவர்கள் அவற்றை வெளியிடப் போவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததால் அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 230 கி.மீட்டர் தூரத்தில் உள்ள எடவா மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ஒருவரின் மகள் ஜஸ்வந்த் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
அவருடன் நெருங்கி பழகிய வகுப்பு தோழர்கள் 5 பேர், அந்த மாணவியை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி, தங்களது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துக் கொண்டனர்.
பின்னர், அந்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடப் போவதாக மாணவியை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
தங்களின் குடும்ப மானம் பறிபோவதை விரும்பாத அந்த மாணவி நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுபோன்ற கொடியவர்கள் தொடரும் கொடுமைக்கு யார் முற்றுப்புள்ளி ‌வைப்பது  என்றுதெரியாது தவிக்கும் மக்கள்

Comments