1. யாழ்ப்பாணத்தில், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1959 ஆம் ஆண்டில் குறிப்பாகக் கல்லூரிக் காலங்களில் இல்லப்போட்டிகளின் கலைவிழாக்களில் நடிகனாக கால் பதித்தார். 1960களில் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிந‌டத்தலில் ‘தேரோட்டி மகன்’ நாடகத்தின் மூலம் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தவர். “கோமாளிகள்” நாடகக் குழுவில் யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ‘அப்புக்குட்டி’ பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பமாகும். மூத்த சகோதரர்களான அரியரட்னம், மெய்கண்டதேவன், இளைய சகோதரர் தயாநிதி (‘நையாண்டி மேளம்’ நடிகர்) ஆகிய அனைவரும் நாடகக் கலைஞர்களே.இலங்கை வானொலியில் வர்த்தக சேவை, தேசிய சேவை இரண்டிலும் ஏராளமான நாடகங்களில் நடித்த்வர். எஸ்.ராம்தாஸின் ‘கோமாளிகள் கும்மாளம்’, கே. எஸ். பாலச்சந்திரனின்’ கிராமத்துக் கனவுகள்’ போன்ற பல தொடர் நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும்,குணசித்திர பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.தொடரும்…..

Comments