ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தில் குடிதண்ணீர் தேடிமக்கள் அலைந்து திரிவதைக் காண முடிகின்றது.

 பேராறு கிராமத்தில் வசிக்கின்ற அநேகர் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் வசிக்கின்ற காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.
இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குழாய்க்கிணறுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இறுதியாக ஒரு குழாய்க்கிணறு மட்டுமே பாவனையில் இருந்தது.
தற்போது அதுவும் பழுதடைந்து விட்டது. இதனால் குடிதண்ணீரைத் தேடி நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய அவலநிலை இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால் இந்த மக்களின் நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. எனவே தமது அவலநிலையைக் கருத்தில் கொண்டு பழுதடைந்த குழாய்க் கிணறுகளைச் சீர் செய்து தருமாறு இந்தப் பகுதி மக்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Comments