தாயின் மடியில்      15.06.1939      மண்ணின்  மடியில்    17.04.2013

தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி.சுப்பிரமணியம்  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மீண்டும் வருவாயா அன்னையாக?

அன்னையே உன் வயிற்றில்
ஆறு பேரைக் கருவாக்கி – எம்மை
பெருவாழ்வு வாழ வைத்து விட்டு
பிரிந்து போனது எங்கே?

விண்மேகம் மழை சொரியும்
விடி பொழுது கலங்கி நிற்கும் – பல
புண்ணியம் செய்த உன்னை
புவி வாழ்வை முடித்துக் காலன்
தன் வசம் இழுத்தானே!
தயக்கம் இன்றி அழைத்தானே!

இரத்தத்தைப் பாலாக்கி
இதயத்தில் எமை ஏந்தி
இடர் தகர்த்து நாம் உயர
பண்பாக வளர்த்தவளே!
பாசத்தைச் சொரிந்தவளே!
பார் போற்றும் தாய் அவளே!

அன்று நாம் துாங்க நீ ப‌டித்தாய் தாலாட்டு!
ஆறு பிள்ளைகளும் கலங்குகிறோம்
உன் நிலைதனைப் பார்த்து!
இன்று எழுந்து வா அம்மா
என் அழுகைதனைக் கேட்டு!
இதயம் கலங்குதம்மா
உன் நிலை பார்த்து ! – எம்
கண்கள் கங்கை ஆகுதம்மா!
காலத்தின் செயல் பார்த்து
கண்ணீர் பெருகுதம்மா!
கண்கள் திறந்திடம்மா
எம் ஓலக்குரல் கேட்டு!

எமது அன்னையின் மரணச்செய்தி கேட்டவுடன் எமது இல்லம் வந்து எமது துயரத்தில் பங்கு கொண்டோருக்கும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவருக்கும் மரணச்சடங்குகள் ஈமைக்கிரியைகளில் நேரடியாக பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும்  மற்றும் சகல உதவிகளையும் செய்து உதவிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் எல்லோருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்ம சாந்தியை வேண்டி பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி!!!       ஓம் சாந்தி!!!         ஓம் சாந்தி!!!

தகவல்
குடும்பத்தினர்

மகள்.இராசேஸ்வரி-0231-379266-015211968487

மகன் குமாரசாமி- 0304352235-015735631003

தேவராசா- 02315331577 (017649433890)

ஜெயகுமார் 0231-15064059-(015213677989)

தவராசா. 0231.9868697 (015256099405)

தவேஸ்வரி 02501-985835 ( 015739114878)


Comments