mordergirls

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு பெருந்தொகையில் சென்று வருகின்றனர்.

அங்கு செல்பவர்கள் அரைகுறை ஆடைகளுடன் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் வர வேண்டாம் என அங்குள்ள உள்ளுர் மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள் என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது வெளிநாடுகளிலிருந்து இங்கு வரும் பல இளம் பெண்கள் அரைகுறையாக அடை அணிந்து வருகிறார்கள். இதனால் பண்பாட்டு சீரழிவுகள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. பெருந்தொகையான புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து பலரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் நல்லூர் வீதிகளில் அரைகுறை ஆடைகளுடன் திரிவதை அவதானிக்க முடிவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

நல்லூர் கோவிலுக்கு வருபவர்கள் ஆலயத்திற்கு வருபவர்களை போல ஒழுங்கான உடைகளை அணிந்து வருமாறு ஆலய நிர்வாகம் அறிவித்த போதிலும் புலம் பெயர்ந்தவர்கள் அரைகுறை ஆடையுடன் தான் திரிகிறார்கள் என வலம்புரி பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ளது.

 

Comments