K-manoranjana

பேருந்து ஒன்றும் Truck வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் பலியாகி உள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் ஸ்காபரோவில் காலை 11.40 இற்கு நடைபெற்றுள்ளது. Truck சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்திற்கு காரணம் எனத்தெரியவந்துள்ளது. இச்சாரதி தனது கைப்பேசியில் கதைத்தவண்ணம் தான் வந்த Steeles அவெனியூவினை விட்டு விலகி, பேருந்து வந்துகொண்டிருந்த Middlefield வீதியில் புகுந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் காவல்த்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

நேருக்கு நேர் இடம்பெற்ற இந்த விபத்தால், பேருந்தின் முற்பாகம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன், பேருந்து 15 மீற்றர் பின்னோக்கித் தள்ளப்பட்டு முள்ளது.

ரொறான்ரோ மேயர் Rob Ford இவ்விபத்தில் இற்ந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தன் அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில்  செவ்வாய்க்கிழமை காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ். காரைநகரைச் சேர்ந்த ஈழத் தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார்.

இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும், 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்ததாகவும் அறியப்படுகிறது.

காயமடைந்த பஸ் சாரதியை பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், விபத்து நடந்த போது சாரதி கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் கொல்லப்பட்ட மனோரஞ்சனா கனகசபாபதியின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments