mar

 

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாகொறற்றா இராயப்பு அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

45 நாட்கள் போனாலும் குறையவில்லை எங்கள் வலிகள்
அன்பையும் அரவணைப்பையும் எங்கள் மீது
காட்டி எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக
இருந்த எங்கள் அன்பு தெய்வமே அக்கா!

வாழ்வில் பிறப்பு எப்படியோ அப்படியே இறப்பும்
அந்த இறப்பின் வலி இந்த உலகில்
ஒவ்வொருவர் வாழ்வதைப் பொறுத்தது
எமது அக்கா எப்படி வாழ்ந்தாள் என்பதை
நாம் படும் வலியும் வேதனையும் காட்டுகிறது.

நாம் கடவுளை கண்டதில்லை உனது
உருவில் கண்டோம் தாயே
கேட்ட வரம் தந்தவளே
அக்கா மணியே!

வாழ்வு இப்படிதான் என்று வாழ்ந்தவளே!
சகோதர அன்பு ஒற்றுமைக்காக உழைத்தவளே!
பிறர் சிரிக்க புன்னகை புரிந்தவளே
உன் தொப்புள் கொடியாக வந்ததிற்கு
கொடுத்து வைத்தோம் அக்கா!

இன்பமாக வாழ்ந்து எங்கள் குடும்பங்களெல்லாம்
உங்கள் பிரிவால் துன்பமாக மாறிவிட்டதே அக்கா
ஆறுமோ தீருமோ இந்த துன்பம்
பத்து மாதம் எங்களை வயிற்றினில் சுமக்காமல்
பெற்றெடுத்த தாயே அக்கா!
எங்கள் உயிர் உள்ளவரை உங்களை நெஞ்சில்
சுமப்போம் அக்கா! அக்கா! அக்கா!

உனது ஆசைகள் நிறைவேற்ற துடிக்கும்
உறவுகளுடன் நீ இருந்து வழி நடத்தி
ஆசீர் வேண்டி நிற்கிறோம்
அக்கா! அக்கா! அக்கா!

எமது துயர் செய்தி கேட்டு நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம். இவரின் ஆத்ம சாந்தி திருப்பலி St.Wilfrid’s Catholic Church, 1675 Finch Avenue, North York, On, M3J 2G8, Canada. எனும் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரனிஸ்(வட்டான்) — கனடா
தொலைபேசி: +14166405443
செல்லிடப்பேசி: +16472362914
லோறன்ஸ் — கனடா
தொலைபேசி: +14162927942
செல்லிடப்பேசி: +16477014833
யோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16473424784
யோன்சன் — கனடா
தொலைபேசி: +19053036501

Comments