at

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஆதரவுடன் மருத்துவ முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இன்று  காலை 9.30 மணியளவில்  படையினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.   இதில் கண், காது, மூக்கு,பல் உட்பட நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொது நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும்  இடம் பெற்றன.   இந் நிகழ்வில் 511 வது படைகளின் கட்டளை அதிகாரி ரெப்ரினன்கேணல் கிர்த்தி, தொற்றா நோய்கள் வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி  திருமதி விதானகே, யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக தொற்றா நோய்கள்  வைத்தியதிகாரி வி.லோகேஸ்வரன், கோப்பாய்  பிராந்திய சுகாதரா வைதியதிகாரி ரி. ஜெயசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.   இந்த மருத்துவ முகாமில் பல இடங்களில் இருந்தும் வந்த பொது மக்கள்  கலந்துகொண்டனர்.

Comments