Drowning-death2

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலுௗர் பிரதேசத்தில் அமைந்துள்ள கங்கைக்கு குளிக்கச் சென்ற ஏழு இளைஞர்களுள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (17) சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நாவலூர் பகுதியிலுள்ள கங்கைக்கு பொழுதுபோக்கிற்காக ஏழு மாணவர்கள் ஒன்றிணைந்து குளிக்கச் சென்றுள்ளனர். இவர்களுள் மூவர் கங்கையில் இறங்கி குளிப்பதற்கு முற்பட்ட வேளை வேகமாக வந்த நீரில் இம்மூவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மஹ்ரூப் நகரைச் சேர்ந்த, ஜூனைதீன் முஹம்மது இஜாஸ் (வயது16), முஹம்மது ரவூப் ரொஷான் (வயது 16) மற்றும் பரீதுல்லா இம்ரான் (வயது 16) ஆகிய மூவருமே மேற்படி சம்பவத்தில் காணாமல் போனவர்களாவர்.

இவர்கள் இம்முறை க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் கிண்ணியா பொலிஸார், கடற் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அங்குச் சென்ற ஏனைய நான்கு மாணவர்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

Comments