kesab_drink_001

ஜேர்மனில் சீரான சுவாசித்தலுக்கு உதவக்கூடிய கேபாப் என்னும் பானத்தை மூன்று மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டில் கேபாப் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.

ஜான் பிளவின்ஸ்கி(Jan Plewinski), ரோமன் வில்(Roman Will) ஆகிய இரு மாணவர்கள் இணைந்து இஞ்சி, கிராம்பு மற்றும் பச்சையம் போன்றவற்றை கலந்து கேபாப் பானத்தை தயாரித்துள்ளனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், அலுவலகத்தில் வேலை பார்த்து வரும் நாங்கள் யாரையும் சார்ந்திருக்காமல் தனியாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

இதனைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட கேபாப் பானத்தை வாடிக்கையாளர்கள் சுவைத்ததில் சாதாரண சூப் வகையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

இதனால் அறிவியல் மாணவனான டோபியாஸ் பால்க்(Tobias Balke)(27) என்பவரையும் எங்களோடு இணைத்துக் கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கேபாப் பானமானது 10,000 பாட்டில்கள் வரை கிழக்கு ஜேர்மனி கடைகளில் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பல இடங்களில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Comments