teacher

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரி மாணவர் ஒருவர் ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபு கல்லூரியில் கல்வி பயிலும் பாலமுனையைச் சேர்ந்த ஏ. அதாவுல்லாஹ் என்ற மாணவர் அக்கல்லூரியில் பயிற்றுவிக்கின்ற பிரபல ஆசிரியர் ஒருவரால் மிகவும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு உடலில் பல காயங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மாணவனின் குடும்பத்தினரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments