burger-293x150

CNE யில்  நோய் பரவக்கூடிய குரொநட் பேகர் {burger} உண்டதால் 150 பேர் பாதிப்பு
கனடிய தேசிய பொருட்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட குரொநட் பேகர்{burger} உண்டதால் 150 பேர்வரையில் நோயுற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நோய் பரவக்கூடிய கிருமிகள் இருந்ததால் நச்சுத்தன்மை ஏற்பட்டதாக ரொறொன்ரோ சுகாதார பகுதியினர்  கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Doughnut-croissant டோனட்- குரொசான் என்ற பாணுக்குள் மாட்டிறைச்சி வைத்து மேப்பிள்-பேக்கன் ஜாம் தடவி செய்யப்படும் ஒருவகை பேகராகும். ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த காரணம் வெள்ளிக் கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை விற்பனை செய்த  Epic Burgers and Waffles ஆகிய 2 விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.குறிப்பிடப்பட்ட நோய்க்கிருமி எந்த வித மணமோ, சுவையோ கொண்டிராத படியால் அதனை உண்டவர்கள் பக்க விளைவுகள் ஏற்படும் வரை அறிய முடியாதெனவும் கூறப்பட்டுள்ளது. குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பக்கவிளைவுகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

இது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியப்படுகின்றது.

 

Comments