police-ara-293x150

PHOENIX—USA  8 வயது சிறுவன் இரவு நேரத்தில் அவனது தாயாரின் காரில் 6 வயது சகோதரியையும் ஏற்றிக்கொண்டு காரை ஓட்டிச்சென்றுள்ளான். கும்பமொன்றுடன் கார் மோதியதில் சிறுமி படுகாயமடைந்து மரணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சிறுமியும் சிறுவனும் இரவு உடையில் இருந்ததாக சார்ஜன் ஸ்ரீவ் மார்ரோஸ் கூறியுள்ளார். சிறுவனுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தாயார் இருவரையும் படுக்கையில் போட்டதாகவும் அரை மணித்தியாலங்களின் பின்னர் இருவரையும் காணவில்லை என தாயார் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

பதட்டமடைந்த தாயார் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளைகளைத் தேடியும் காணாததால் பிள்ளைகள் கடத்தப்பட்டிருக்கலாமென பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் ஆனால் அதே நேரம் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் விபத்து நடந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தாய் அங்து அவரது 2 பிள்ளைகளும் விபத்திற்காளாகி இருப்பதை கண்டுள்ளார்.
இது ஒரு துரதிஸ்டமான துன்பநிகழ்வு என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

Comments