மொனாக்கோவில் மொன்ரே கார்லோ நகரில் தரை மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில் அரை அங்குலம் அகலமான கயிற்றில் நடந்து மிட்ச் கெமீட்டர் என்ற 23 வயது இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

கீழே குனிந்து பார்த்தால் தலை சுற்றி விழக்கூடிய அபாயகரமான நிலையில் 50 மீற்றர் நீளமான மேற்படி கயிற்றில் இரு தடவைகள் நடந்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை முயற்சியை கடற்கரையில் கூடியிருந்த மக்கள் திகிலுடன் அவதானித்துக் கொண்டிருந்தனர்.

தனது சாதனை தொடர்பில் மிட்ச் கெமீட்டர் கூறுகையில், ‘என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நான் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன். அத்துடன் எனது மனப் பலத்தின் வரையறைகள் குறித்தும் நான் சரியாக மதிப்பிட்டுள்ளேன். அதனாலேயே மேற்படி சாதனையை வெற்றிகரமாக என்னால் நிறைவேற்ற முடிந்தது” என்று கூறினார்.

அவர் இந்தச் சாதனை முயற்சியின் போது பாதுகாப்புக்காக கயிறொன்றை தனது உடலில் கட்டியிருந்த போதும் ஒரு தடவையேனும் விழாது நடந்து கயிற்றின் முழு நீளத்தையும் இரு தடவைகள் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments