e

சோடாப் போத்தல் எறும்புடன் இருந்தது தெரியாமல், அதனை எடுத்து அருந்திய ஒன்றரை வயதுப் பிள்ளையின் தொண்டைக்குள் எறும்புகள் கடித்ததனால் தொண்டை வீங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

கட்டுவன் றோட் மல்லாகத்தைச் சேர்ந்த ரஜித் கபின்ஜா என்ற பிள்ளையே கடி எறும்பினால் கடியுண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

வீட்டில் சோடா வாங்கிக் குடித்துவிட்டு எஞ்சிய சோடாவுடன் போத்தலை வைத்ததாகவும், விளையாடிக் கொண்ட இருந்த பிள்ளை அதனை எடுத்துக் குடித்ததாகவும் அதன் பின் பிள்ளை வீறிட்டு அழுது கத்தியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் வந்து பார்த்து, நடந்த சம்பவத்தை உணர்ந்து உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Comments