me

மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையின் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் அந்தக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட வகுப்புக்களை நடத்த முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாக மாணவாகள் தொவித்துள்ளனர். கடந்த வாரம் குறிப்பிட்ட கட்டிடத்தில் சிறு பகுதி உடைந்ததைத் தொடர்ந்து மிகுதிப் பகுதிகளும் தொடர்ந்து உடைய ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் வகுப்புக்களை நடத்த இடம் இல்லாத நிலையில் வகுப்புக்களை மர நிழல்களின் கீழ் நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றார்கள்.இத்தகைய அவல நிலமையையிட்டு வலிகாமம் கல்வி வலயம் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Comments