mo

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் மரணமடைவதற்கு 12 மணித்தியாலங்களின் முன் அந்தத் தாயின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது 3 மகள்மாரும் ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சாரா (19 வயது), கெய்லீ (21 வயது), ஜொடி சுவாலெஸ் (22 வயது) ஆகிய சகோதரிகளே தமது தாயாரான பெக்கி சுவாலெஸின் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய ஒரே சமயத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

4 வருடங்களுக்கு முன் மார்புப் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட பெக்கிக்கு புற்றுநோய் ஈரலுக்கு பரவியுள்ளதாகவும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாது எனவும் மருத்துவர்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில், சகோதரிகள் மூவரும் தமது தாயின் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய 26ஆம் திகதி தமது திருமணத்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

ஆனால், தாயின் உடல் நிலைமையோ பெரிதும் மோசமடைய சகோதரிகள் மூவரும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரே சமயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

தனது மகள்மார் திருமண பந்தத்தில் இணைந்துக் கொண்டுள்ளதை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த பெக்கி அந்த திருமணம் இடம்பெற்று 12 மணி நேரத்தில் மரணமானார்.

 

Comments